Skip to main content

ஞானகுரு!


ஒரு காட்டில் சிங்கம், கரடி, நரி மூன்றும் நண்பர்களாக, ஒன்றாக வசித்தன. வேட்டையாட ஒன்றாகவே செல்லும். வழக்கம் போல் ஒருநாள், மூன்றும் வேட்டைக்குக் கிளம்பின. கிடைக்கும் இரையில் மூவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்பது ஏற்பாடு. பாதையில் ஒரு மான் குறுக்கிட்டது. சிங்கம் ஒரே அடியில் அதை அடித்து வீழ்த்தியது.
""இந்த மானை பங்குப் போடு!'' என்று கரடிக்கு உத்தரவிட்டது சிங்கம்.
கரடி மிகவும் சிரமப்பட்டு அந்த மானை மூன்று பங்காக்கியது. ""இதோ பங்குகள் தயார்!'' என்றது. சிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது.
""சமமா? எது சமம்? யாருக்கு யார் சமம்?'' என்று கேட்டு, கரடி மீது பாய்நது குதறியது சிங்கம். ராஜ மரியாதை தெரியாத உனக்கு இந்தக் கதிதான்,'' என்றது சிங்கம்.
பின்னர் நரியைப் பார்த்து கட்டளையிட்டது சிங்கம். ""இதைப் பங்கு போடு!''
நரி சிரமப்படவில்லை. எல்லாப் பங்கையும் சிங்கத்தின் முன்பே குவித்தது. தனக்கு முன்பு ஒரு மிகச் சிறிய துண்டை மட்டும் வைத்துக் கொண்டது. ""அரசே! இதோ தங்கள் பங்கு!'' என்றது நரி.
சிங்கத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ""சபாஷ் நரியே! உன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகிறேன். என்ன பணிவு. ராஜ மரியாதை என்ன என்பது உனக்குத் தான் தெரிந்திருக்கிறது. நீ மகா மகா புத்திசாலிடா... இந்த பாடத்தை எல்லாம் எங்கேடா கத்துக்கிட்ட!'' என்று சிங்கம் பாராட்டு மழை பொழிந்தது.
நரி பணிவுடன் சொன்னது! ""அரசே! நான் பிறவியிலேயே புத்திசாலி இல்லை. இப்போதுதான் நான் புத்திசாலியானேன். தங்கள் பாராட்டுகளையும் பெறுகிறேன்.''
""அதெப்படி திடீரென்று இப்பொழுதே புத்திசாலியானாய்?''
""பிரபுவே! சற்று முன்பு தான் புத்திசாலியானேன். இதோ செத்துக் கிடக்கிறதே, இந்தக் கரடிதான் என் ஞான குரு!'' என்றது நரி.
"... ... ஹா...' என்று சிரித்தது சிங்கம்.

***

Comments

Popular posts from this blog

ஆமை... ஆமை...

வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான் . "" வா ஆமையே ! வா ! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் . நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா ? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய் ! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன் ... ஹி ... ஹி ... ஹி ...'' என்று சிரித்தபடி , தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன் . வேடனைக் கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை . "" வேடனே ! என்னைப் பிடிக்க நீ யார் ? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது ?'' என்று துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை கேட்டது . "" ஆமையே ! நான் உன்னை விட மேலான மனிதப் பிறவியில் இருப்பவன் . எனக்கு எல்லா சக்தியும் இருக்கிறது . உன்னைக் கொன்று தின்னவும் என்னால் முடியும் ! அதே நேரத்தில் உன்னை உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும் . "" எனது பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது ! நீ ஒர

பொற்காசு

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவனுக்கு மீன் என்றால் உயிர் . ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான் .  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான் . பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை . அரசனைப் பார்த்து , "" நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால் , நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள் . ஆனால் , பரிசு பெறுபவன் , ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே , அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான் . அதனால் , அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் !'' என்றாள் . "" நீ சொல்வது சரிதான் . ஆனால் , கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது ?'' என்று கேட்டான் அரசன் . "" அந்த மீன் ஆணா ? பெண்ணா ? என்று

வசியமந்திரம் !

செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான் . அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை . அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள் .  அவன் சிறிது பணமும் , படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . அவன் வெகு தூரம் நடந்து சென்றான் . வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது . அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான் . குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார் . அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது . அதை அடித்துக் கொன்றான் . சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார் . "" தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன் . அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும் ,'' என்றார் . அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது . "" அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள் ,'' என்றார் முனிவர் . அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்