Skip to main content

குரு சிஷ்யன்!

முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான்.
குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, "இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்' என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர்.
சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான். அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். எனவே, தம்முடைய வாரிசாக அவனைக் கருதி வந்தார்.
அன்று நள்ளிரவு நேரம். குருநாதர், தம்முடைய மாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அங்கே அந்த இளைஞனை தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில், அவர்கள் படித்த புத்தகங்கள் கிடந்தன. அவனைத் தேடிக்கொண்டு வெளியே வந்தார் குருநாதர். அவன், கொடும்பனியில் நட்டநடு வழியில் படுத்திருந்தான். அவனருகே, ஒரு சுவடி நூல் இருந்தது. அதில் ஆங்காங்கே, அவன் எழுதிய விளக்கக் குறிப்புகளும் காணப்பட்டன. அவற்றை மேலோட்டமாய் பார்த்த குருநாதர் வியப்புற்றார். தூங்கிக் கொண்டிருந்த சீடனை தொந்தரவு செய்ய விரும்பாமல், தன்னுடைய மேலாடையை எடுத்து அவருக்குப் போர்த்தினார். சுவடிக் கட்டுடன் உள்ளே சென்றார். இரவு நெடுநேரம் வரை சீடனின் குறிப்புரைகளை அவர் அக்கரையோடு படித்தார். தமக்குள் பாராட்டிக் கொண்டார்.
பொழுது விடிந்தது. கண்விழித்தான் இளைஞன். பக்கத்தில் சுவடிகளைக் காணவில்லை. குருவின் மேலாடையை யாரோ அவன் மீது போர்த்தியிருந்தனர். மாணவர்களில் யாரேனும் அந்தக் குறும்புச் செயலைக் செய்திருக்க வேண்டும் என்று பட்டது. ஆனாலும், குருவின் மேலாடையை இரவு முழுதும் தான் போர்த்திக் கொண்டிருந்தோம் என்பதே அவனுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. குருவிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றான் இளைஞன். குருநாதர் அவனை வரவேற்று, ""நீதான் இதையெல்லாம் எழுதியதா?'' என்று அன்புடன் கேட்டார்.
""ஐயனே! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்!'' என்று கூறியபடி, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்.
""தன் சீடன் மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஒன்றும் மந்தபுத்திக்காரன் அல்ல; அவன் ஞானவான்!'' என்று எல்லாரிடமும் பெருமையாய் சொன்னார் சுவாமிகள். அன்று முதல் அந்த இளைஞனை தம்முடைய முதன்மைச் சீடராக அறிவித்தார் குரு. அந்தச் சீடர்தான் பிற்பாடு, ஸ்ரீ ராகவேந்திரர் என்று உலகோரால் வணங்கிப் போற்றப்படுபவர்.
தம்முடைய சீடர்களின் திறமையையும், திறமையின்மையையும் குருநாதர் சரிவரப் புரிந்து கொண்டிருப்பார்.

***

Comments

Popular posts from this blog

ஆமை... ஆமை...

வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான் . "" வா ஆமையே ! வா ! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் . நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா ? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய் ! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன் ... ஹி ... ஹி ... ஹி ...'' என்று சிரித்தபடி , தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன் . வேடனைக் கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை . "" வேடனே ! என்னைப் பிடிக்க நீ யார் ? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது ?'' என்று துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை கேட்டது . "" ஆமையே ! நான் உன்னை விட மேலான மனிதப் பிறவியில் இருப்பவன் . எனக்கு எல்லா சக்தியும் இருக்கிறது . உன்னைக் கொன்று தின்னவும் என்னால் முடியும் ! அதே நேரத்தில் உன்னை உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும் . "" எனது பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது ! நீ ஒர

பொற்காசு

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவனுக்கு மீன் என்றால் உயிர் . ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான் .  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான் . பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை . அரசனைப் பார்த்து , "" நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால் , நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள் . ஆனால் , பரிசு பெறுபவன் , ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே , அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான் . அதனால் , அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் !'' என்றாள் . "" நீ சொல்வது சரிதான் . ஆனால் , கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது ?'' என்று கேட்டான் அரசன் . "" அந்த மீன் ஆணா ? பெண்ணா ? என்று

வசியமந்திரம் !

செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான் . அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை . அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள் .  அவன் சிறிது பணமும் , படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . அவன் வெகு தூரம் நடந்து சென்றான் . வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது . அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான் . குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார் . அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது . அதை அடித்துக் கொன்றான் . சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார் . "" தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன் . அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும் ,'' என்றார் . அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது . "" அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள் ,'' என்றார் முனிவர் . அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்